டபுள் கேம் ஆடும் அமெரிக்கா.! “எங்க கப்பலை விட்ருங்க” என கெஞ்சும் ஜோ பைடன் அரசு..? சவுதி அரேபியா கோரிக்கைக்கு நடுவே பகீர் திருப்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டபுள் கேம் ஆடும் அமெரிக்கா.! “எங்க கப்பலை விட்ருங்க” என கெஞ்சும் ஜோ பைடன் அரசு..? சவுதி அரேபியா கோரிக்கைக்கு நடுவே பகீர் திருப்பம்..!!

Published

on

ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி ஆயுதக் குழுவுடன் ஒரு ரகசிய ஒப்பந்தம் போட அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகப் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. செங்கடல் பகுதியில் தங்களின் வணிகக் கப்பல்கள் மற்றும் ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என ஹூதி அமைப்பிடம் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, ஹூதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல்களைத் தடுப்பதற்காக அமெரிக்காவின் ராணுவ உதவியைச் சவுதி அரேபியா கோரியிருந்த நிலையில், இந்த புதிய நகர்வு அரங்கேறியுள்ளது.

ஏற்கெனவே அமெரிக்கா மற்றும் ஹூதி அமைப்பினரிடையே போர்நிறுத்தம் அமலில் உள்ளதாகக் குறிப்பிடப்படும் நிலையில், இந்த புதிய ஒப்பந்தத் திட்டம் மத்திய கிழக்கு பிராந்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. எனினும், தங்களின் பிராந்திய நலன்கள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே அமெரிக்கா இந்த சமரச முயற்சியில் இறங்கியுள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in