“உடைகளை களைத்து அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி..?” கணவனின் தம்பியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்.. பஞ்சாயத்தில் நடந்த அநியாயம்.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CINEMA

“உடைகளை களைத்து அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி..?” கணவனின் தம்பியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்.. பஞ்சாயத்தில் நடந்த அநியாயம்.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ஐலாபூர் கிராமத்தில், கணவனைப் பிரிந்து அவரது தம்பியுடன் வாழ்ந்து வந்த பெண் ஒருவரை, உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து பஞ்சாயத்து என்ற பெயரில் கொடூரமாகத் தாக்கி, முகத்தில் மிளகாய்ப் பொடியை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தன் கணவரின் தம்பியான பொச்சய்யா என்பவருடன் சொந்த விருப்பத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியேறி, தனியாக வீடு எடுத்து வசிக்கத் தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொச்சய்யாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று தகராறில் ஈடுபட்டு, ஊர் பஞ்சாயத்தைக் கூட்டி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையே, அந்தப் பெண்ணின் ஆடைகளைக் களைந்து, உடலின் அந்தரங்க உறுப்புகள் உட்படப் பல்வேறு பகுதிகளில் மிளகாய்ப் பொடி மற்றும் கெமிக்கல் திரவத்தைத் தடவி சித்ரவதை செய்ததாகச் சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று மேட்பள்ளி துணை காவல் கண்காணிப்பாளர் ஏ. ராமுலு விளக்கம் அளித்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் அந்தப் பெண் தாக்கப்பட்டதும், அவரது முகத்தில் மட்டுமே மிளகாய்ப் பொடி வீசப்பட்டதும் போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றுள்ள போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in