“உடனே கீழே இறங்குங்க..!” ஓடும் பேருந்தில் திடீரென எழும்பிய அசுரத் தீப்பிழம்பு.. அலறியடித்த ஒடிய டிரைவர்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உடனே கீழே இறங்குங்க..!” ஓடும் பேருந்தில் திடீரென எழும்பிய அசுரத் தீப்பிழம்பு.. அலறியடித்த ஒடிய டிரைவர்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

Published

on

விஜயவாடாவிலிருந்து தெக்கலி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் டிராவல்ஸ் பேருந்தில் திடீரென ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், ஓட்டுநரின் சாதுரியத்தால் 6 பயணிகள் நூலிழையில் உயிர் தப்பிய பெரும் விபத்து ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசான்னபேட்டா மண்டலத்தில் நடந்துள்ளது. ஜம்மு சந்திப்பு என்ற இடத்தின் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பேருந்தின் ஒரு பகுதியில் இருந்து தீப்பிழம்புகள் எழத் தொடங்கியுள்ளன. இதைக் கவனித்து உடனடியாகச் செயல்பட்ட பேருந்தின் ஓட்டுநர், பேருந்தைச் சாலையோரமாக நிறுத்திப் பயணிகளை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளார்.

ஓட்டுநரின் இந்த மின்னல் வேக எச்சரிக்கையால் பேருந்தில் இருந்த 6 பயணிகளும் எந்தவித காயமுமின்றிப் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால், ஒரு மிகப்பெரிய உயிர்ச்சேதம் தடுத்து நிறுத்தப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பேருந்தில் பற்றி எரிந்த தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரத் தீவிரமாகப் போராடினர். இருப்பினும், தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் தீயை முழுமையாக அணைப்பதற்குள்ளேயே அந்தத் தனியார் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து உள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in