LATEST NEWS
OMG: 60 வருஷமா தூங்கவே இல்லையாம்… 83 தாத்தாவின் விசித்திர வாழ்க்கை.. மருத்துவ உலகையே அதிர வைத்த அரிய பாதிப்பு.!!
வியட்நாமைச் சேர்ந்த 83 வயதான தாய் ங்காக் என்பவர், கடந்த 1962-ல் ஏற்பட்ட கடுமையான காய்ச்சலுக்குப் பின் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தூங்காமல் வாழ்ந்து வருகிறார். மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள இவருக்கு ‘நிரந்தரத் தூக்கமின்மை’ அல்லது ஏதேனும் அரிய வகை பாதிப்பு இருக்கலாம் என்று கருதப்பட்டாலும், இதற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
பொதுவாக மனிதர்களுக்குத் தூக்கம் இன்றியமையாத ஒன்று என்றாலும், தாய் ங்காக் எந்தவித உடல்நலக் குறைவும் இன்றி தனது அன்றாட விவசாய வேலைகளில் மிகவும் இயல்பாகவும் சுறுசுறுப்பாகவும் ஈடுபட்டு வருகிறார். இத்தனை ஆண்டுகள் தூங்காத நிலையிலும் அவரது உடல் உறுப்புகள் மற்றும் மனநிலை சீராக இருப்பது மருத்துவர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
அறிவியல் ரீதியாக இது ஒரு ஆச்சரியமான நிகழ்வாகப் பார்க்கப்பட்டாலும், தாய் ங்காக் சக மனிதர்களைப் போல் நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும், ஆனால் அதற்கான பல முயற்சிகள் செய்தும் அவரால் தூங்க முடிவதில்லை என்றும் கவலையோடு தெரிவித்துள்ளார்.
