அடக்கொடுமையே..! சப்-இன்ஸ்பெக்டரை மனைவியே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கொடூரம்… சென்னையில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடக்கொடுமையே..! சப்-இன்ஸ்பெக்டரை மனைவியே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கொடூரம்… சென்னையில் பரபரப்பு..!!

Published

on

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ராஜ் (59) என்பவர், அவரது இல்லத்தில் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் இது ஒரு சந்தேக மரணமாகக் கருதப்பட்டு நுங்கம்பாக்கம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்தின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவரது வீட்டிலிருந்து மர்ம நபர் ஒருவர் வெளியேறியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, ராஜின் மனைவி செல்வராணி (32) என்பவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவரே தனது நெருங்கிய நண்பரான தேவா என்பவருடன் சேர்ந்து கணவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

இந்தக் கொடூரக் கொலைக்கான பின்னணி குறித்து செல்வராணியிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த உதவி ஆய்வாளர் ராஜ் மீது ஏற்கனவே கடந்த 2025ஆம் ஆண்டில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், கொலை செய்யப்பட்ட போது ராஜ் சத்தம் போடாமல் இருந்ததால், அவருக்கு மயக்க மருந்து கொடுத்து இந்தச் சதிச் செயல் அரங்கேற்றப்பட்டதா அல்லது குடும்பத் தகராறு மற்றும் கள்ளக்காதல் விவகாரம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது செல்வராணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள அவரது நண்பர் தேவாவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in