Uncategorized
“அடேய் யாரு டா நீ..?” பாட்டியின் ரூ.500 நோட்டைத் திருடி செல்ல நாய் செய்த காரியத்தை பாருங்க.. இணையத்தைக் குலுக்கும் கியூட் வீடியோ..!!
பாட்டி பால் மற்றும் பிஸ்கட் வாங்குவதற்காகத் தனது பணப்பையிலிருந்து காசு எடுப்பதை தினமும் உன்னிப்பாகக் கவனித்து வந்த ‘டோகேஷ்’ என்ற செல்ல நாய், பாட்டியின் பணப்பையிலிருந்து ரூ.500 நோட்டைத் திருடிக்கொண்டு நேராகக் கடைக்குச் சென்ற வினோத மற்றும் வேடிக்கையான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தினமும் பாட்டி செய்யும் இந்தச் செயலைக் கவனித்த அந்தச் செல்லப் பிராணி, “நாமும் இதைச் செய்யலாமே” என்று நினைத்து, யாருக்கும் தெரியாமல் பாட்டியின் பையிலிருந்த ரூ.500 நோட்டைத் தனது வாயில் கவ்விக்கொண்டு கடைக்காரர் முன்னிலையில் போய் நின்றுள்ளது.
வாயில் 500 ரூபாய் நோட்டுடன் நாய் வந்து நிற்பதைக் கண்டு ஆச்சரியமடைந்த கடைக்காரர், அதன் புத்திசாலித்தனத்தைக் கண்டு வியந்து, அதற்குப் பிடித்தமான பிஸ்கட் பாக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்துள்ளார். பாட்டியின் ஒட்டுமொத்த “சிஸ்டத்தையும் ஹேக்” செய்து, மனிதர்களைப் போலவே பணத்தைக் கொடுத்துப் பொருள் வாங்கிய இந்தச் சமத்துப் பிராணியின் கியூட்டான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களின் இதயங்களைக் கொள்ளையடித்து வருகின்றன.
