LATEST NEWS
“அய்யோ ச்சீ கூச்சமே இல்லையா?..” லிஃப்ட்டுக்குள் நுழைந்து இளைஞர் செய்த அருவருப்பான காரியம்.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மின் தூக்கியில் இளைஞர் ஒருவர் அநாகரிகமான முறையில் சிறுநீர் கழித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அருவருப்பான சம்பவம் இந்திராபுரம் பகுதியில் உள்ள அகின்சா காண்ட்-1-ல் அமைந்துள்ள ‘ஷிப்ரா கிருஷ்ணா விஸ்டா’ சொசைட்டியில் நடந்துள்ளது. மின் தூக்கிக்குள் நுழைந்த அந்த இளைஞர், எவ்வித கூச்சமும் இல்லாமல் அதன் ஒரு மூலையில் சிறுநீர் கழிக்கத் தொடங்கியுள்ளார்.
அவர் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போதே மின் தூக்கி பல தளங்களில் நின்றும், கதவுகள் திறந்தும் உள்ளன. இருப்பினும், அதைப் பற்றியெல்லாம் எவ்வித கவலையும் படாத அந்த நபர், தனது செயலைத் தொடர்வதிலேயே முழுமையாக மூழ்கியிருந்தார். இறுதியாக எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி தனது தளம் வந்ததும் அவர் அங்கிருந்து நடந்து சென்றுள்ளார். மின் தூக்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த அநாகரிகமான காட்சி இணையத்தில் வைரலானதை அடுத்து, அந்த நபரின் பொது ஒழுக்கமற்ற செயலுக்கு நெட்டிசன்கள் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
