“இது என்ன கொடுமை..” ஒன்றரை மாசத்துல 8 முறை கடித்த பாம்பு…17 வயது மாணவிக்கு நேர்ந்த விசித்திர கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“இது என்ன கொடுமை..” ஒன்றரை மாசத்துல 8 முறை கடித்த பாம்பு…17 வயது மாணவிக்கு நேர்ந்த விசித்திர கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

உத்திரபிரதேசம் ஐஹான் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவியான அனிதா, கடந்த ஒன்றரை மாத காலத்தில் மட்டும் எட்டாவது முறையாகப் பாம்பால் கடிக்கப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை அவர் மீண்டும் பாம்பால் கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பதறியடித்துக் கொண்ட அவரது உறவினர்கள் அவரை உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து அனிதாவுக்குப் பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அலிகார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், அவரைத் தொடர்ந்து கடிக்கும் அந்தப் பாம்பை இதுவரை யாராலும் பிடிக்க முடியவில்லை.

ஒன்றரை மாதத்தில் ஒரே பெண்ணை ஒரு பாம்பு எட்டு முறை கடித்த இந்த வினோதச் சம்பவம், வெறும் தற்செயலாக நடந்ததா அல்லது இதில் ஏதேனும் மர்மம் மறைந்துள்ளதா என்பது குறித்து அந்தப் பகுதி முழுவதும் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அனிதாவின் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படாமல் இருக்க அவரது குடும்பத்தினர் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வரும் அதே வேளையில், இந்த விசித்திரமான நிகழ்வு ஒட்டுமொத்த மாவட்ட மக்களிடையேயும் பெரும் ஆச்சரியத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in