“நெஞ்சே நடுங்குது.. சாலையைக் கடந்த சப்-இன்ஸ்பெக்டர்..” அதிவேகத்தில் வந்த ஸ்கூட்டர் செய்த பயங்கரம்.. 55 வயது போலீசாருக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“நெஞ்சே நடுங்குது.. சாலையைக் கடந்த சப்-இன்ஸ்பெக்டர்..” அதிவேகத்தில் வந்த ஸ்கூட்டர் செய்த பயங்கரம்.. 55 வயது போலீசாருக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

Published

on

ஹைதராபாத் டேங்க் பண்ட் பகுதியில் விநாயகர் விசர்ஜனப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கொத்தகுடெம் டூ டவுன் காவல் நிலையத்தைச் சேர்ந்த 55 வயது சப்-இன்ஸ்பெக்டர் கே. வெங்கன்னா, அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஹைதராபாத்திற்கு வந்திருந்த அவர், டேங்க் பண்ட் சாலையில் சாலையைக் கடக்க முயன்றபோது மிக வேகமாக வந்த ஸ்கூட்டர் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பியோடியது. இந்த விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

விபத்தில் படுகாயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் வெங்கன்னா உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய அடையாளம் தெரியாத இருசக்கர வாகன ஓட்டியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை விரைந்து கைது செய்ய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதோடு, மேல் விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in