“என்னை மீண்டும் காதலி… “வற்புறுத்திய வாலிபர்… மாடியிலிருந்து குதித்த 17 வயது மாணவி..! போக்சோவில் கைதான சகோதரர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னை மீண்டும் காதலி… “வற்புறுத்திய வாலிபர்… மாடியிலிருந்து குதித்த 17 வயது மாணவி..! போக்சோவில் கைதான சகோதரர்கள்..!!

Published

on

சென்னையை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்தவர் ரோகித் (19). கல்லூரி மாணவரான இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ரோகித்தின் நடத்தை சரியில்லாததால் கடந்த சில மாதங்களாக அந்த மாணவி அவருடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ரோகித், தனது அண்ணன் விக்னேஷ் (20) என்பவருடன் அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று மீண்டும் தன்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கடும் மனமுடைந்த மாணவி, திடீரென வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

Advertisement

இதில் படுகாயமடைந்த மாணவியை அவரது குடும்பத்தினர் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீசார் ரோகித் மற்றும் அவரது அண்ணன் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டம் மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in