“தேசத்தையே உலுக்கிய ‘நீல நிற டிரம்’ கொலை வழக்கு..” கள்ளகாதலனுக்கும் கில்லாடி மனைவிக்கு காத்திருக்கும் தண்டனை என்ன..? நாளை நெருங்கும் கிளைமாக்ஸ்..!! – cinefeeds
Connect with us

CRIME

“தேசத்தையே உலுக்கிய ‘நீல நிற டிரம்’ கொலை வழக்கு..” கள்ளகாதலனுக்கும் கில்லாடி மனைவிக்கு காத்திருக்கும் தண்டனை என்ன..? நாளை நெருங்கும் கிளைமாக்ஸ்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘நீல நிற டிரம் கொலை வழக்கில்’ நீதிமன்றம் நாளை தனது இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளது. இந்த வழக்கின் பின்னணியில், முஸ்கான் என்ற பெண் தனது கள்ளக்காதலன் சாஹிலுடன் இணைந்து, தனது கணவர் சௌரப் ரஸ்தோகியைத் திட்டமிட்டுக் கொடூரமான முறையில் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கொலையை மறைப்பதற்காக, அவர்கள் இருவரும் சௌரப்பின் உடலை ஒரு பெரிய நீல நிற பிளாஸ்டிக் டிரம்முக்குள் அடைத்து மறைத்து வைத்த அதிர்ச்சி விபரம் விசாரணையில் அம்பலமானது.

இந்தக் கொடூரமான படுகொலைச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் அனைத்தும் நீதிமன்றத்தில் நிறைவடைந்துள்ளன. நாளை வெளியாகவிருக்கும் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் கில்லாடி மனைவி முஸ்கான் மற்றும் அவரது கள்ளக்காதலன் சாஹில் ஆகிய இருவருக்கும் என்ன தண்டனை கிடைக்கப் போகிறது என்பதை அறிய ஒட்டுமொத்த மீரட் மாவட்ட மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in