LATEST NEWS
திடீர் ட்விஸ்ட்.. தவெக கூட்டத்திற்கு வந்த அமமுக MLA.. அதிர்ச்சியில் டிடிவி தினகரன்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!
தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், அமமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் நேரில் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து நடந்த இக்கூட்டத்தில் காமராஜ் பங்கேற்றதைத் தொடர்ந்து, அவர் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்துவிட்டாரா என்ற கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்த நிலையில், முதலமைச்சரின் தேர்தல் மேடைக்கே அவர் வந்திருப்பது இந்த சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
ஒருவேளை காமராஜ் தவெகவில் முறைப்படி இணைந்தாலும், கட்சித் தாவல் தடைச் சட்ட விதிகளின்படி அவர் சட்டமன்றத்தில் அமமுக உறுப்பினராகவே நீடிப்பார். இருப்பினும், சட்டப்பேரவையில் முக்கிய மசோதாக்கள், வாக்கெடுப்புகள் அல்லது அரசு சார்ந்த கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் வேளையில், தவெகவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக அவரால் சட்டமன்றத்தில் செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
