“ஐயா.. என் மகளை காப்பாத்துங்க..!” வெளிநாட்டு வேலை நம்பிப்போன பெண்ணுக்கு துபாயில் காத்திருந்த கொடூர நரகம்.. காவல் நிலையத்தில் கதறிய தந்தை.. திடுக்கிடும் பின்னணி..!1 – cinefeeds
Connect with us

CRIME

“ஐயா.. என் மகளை காப்பாத்துங்க..!” வெளிநாட்டு வேலை நம்பிப்போன பெண்ணுக்கு துபாயில் காத்திருந்த கொடூர நரகம்.. காவல் நிலையத்தில் கதறிய தந்தை.. திடுக்கிடும் பின்னணி..!1

Published

on

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியின் சோட்டா காக்ரா பகுதியைச் சேர்ந்த மோனிகா கச்சப் என்ற இளம் பெண், ஐக்கிய அரபு அமீரகத்தில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாங்கித் தருவதாகக் கூறி துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு மனிதத் கடத்தல் கும்பலால் பிணைக் கைதியாக சிறைபிடிக்கப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆன்லைன் மூலமாக ‘ஏஎம்டி டிரேடு சொல்யூஷன்ஸ்’ என்ற முகமையின் ஏஜென்ட்களான பிரியங்கா, ரித்தேஷ் மற்றும் முகமது மெராஜ் அன்சாரி ஆகியோரைத் தொடர்பு கொண்ட மோனிகாவிடம், அமீரகத்தில் தங்குமிடம் மற்றும் உணவுடன் நல்ல வேலை தருவதாக ஆசை வார்த்தை கூறி கடந்த மே 5 அன்று டெல்லியிலிருந்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அமீரகம் சென்றடைந்ததும் அவரது பாஸ்போர்ட் மற்றும் செல்போன் பறிக்கப்பட்டதோடு, அரபு மொழியிலான ஆவணங்களில் வலுக்கட்டாயமாக அவரது கைரேகையும் கையெழுத்தும் பெறப்பட்டு ஒரு வீட்டில் முதியவரைப் பராமரிக்கும் வேலை என்ற பெயரில் கொடுமைப்படுத்தப்பட்டு, கடுமையான உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்தத் துயரத்திலிருந்து தப்பித்துத் தாயகம் திரும்பக் கோரிய மோனிகாவை, அவர் பெயரில் 12,600 திரஹாம் கடன் இருப்பதாகக் கூறி, அந்தப் பணத்தைத் தராவிட்டால் ஆயுள் முழுவதும் துபாய் சிறையில் அடைத்துவிடுவோம் என ஏஜென்ட்கள் மிரட்டியுள்ளனர். எப்படியோ ரகசியமாகத் தனது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு மோனிகா அழுது புலம்பியதைத் தொடர்ந்து, அவரது தந்தை ரத்னா கச்சப் ராஞ்சி விமான நிலையக் காவல் நிலையத்தில் “ஐயா, என் மகள் துபாயில் தவிக்கிறாள், அவளைக் காப்பாற்றுங்கள்!” என எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் கடத்தல் ஏஜென்ட்கள் மூவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ள போலீஸார், இந்திய தூதரகத்திற்குத் தகவல் அளித்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதுடன், மத்திய வெளியுறவு அமைச்சகமும் இப்பெண்ணை மீட்க விரைந்து செயல்பட வேண்டும் எனப் பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in