CRIME
நாட்டையே உலுக்கிய கொடூரம்..! துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்.. நீல நிற பேரலுக்குள் கொடூரம்..! கணவரைக் கொன்ற மனைவிக்கும் காதலனுக்கும் நீதிமன்றம் கொடுத்த அதிரடித் தீர்ப்பு..!!
மீரட் நீதிமன்றம், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற வணிகக் கடற்படை அதிகாரி சௌரப் ராஜ்புத் கொலையில், அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது காதலன் சாஹில் சுக்லா ஆகிய இருவரையும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துள்ளது. சௌரப்பின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, ஒரு நீல நிற பிளாஸ்டிக் பேரலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
முஸ்கான் தனது காதலன் சாஹிலுடன் சேர்ந்து சௌரப்பைக் கொல்வதற்குத் திட்டமிட்டுள்ளார். இந்த கொடூரக் குற்றத்தைச் செய்த பிறகு, ஆதாரங்களை அழிப்பதற்காக உடலைத் துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பேரலில் அடைத்து வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் அவர்களைக் குற்றவாளிகளாக அறிவித்தது. இந்த வழக்கின் கொடூரத் தன்மை காரணமாக, இது பொதுமக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றதுடன், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
