LATEST NEWS
“என் பிள்ளையை விட்டுட்டோமே” பெற்றோரின் பிரிவால் நேர்ந்த சோகம்… மீன்பிடிக்கச் சென்ற 6 வயது சிறுவன் பரிதாப பலி… கதறி துடிக்கும் தாய் தந்தை..!!
ஆந்திரப் பிரதேசம் குண்டூர் மாவட்டம் மோரம்புடி கிராமத்தில், 6 வயது சிறுவன் பிரபு கிரண் குளத்தில் மூழ்கி பலியான நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சிறுவனின் பெற்றோர் கடந்த மூன்று ஆண்டுகளாகக் குடும்பத் தகராறு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். நீதிமன்ற உடன்படிக்கையின்படி, சிறுவன் பகல் நேரத்தில் தந்தையுடனும், இரவு நேரத்தில் தாயாருடனும் தங்கி வந்துள்ளான்.
பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து அருகில் இருந்த குளம் ஒன்றில் மீன் பிடிக்கச் சென்றுள்ளான். அப்போது குளத்தில் இருந்த நீரின் வேகமான சுழலில் சிக்கிய சிறுவன், சேற்றில் மாட்டிக்கொண்டு பரிதாபமாக நீரில் மூழ்கியுள்ளான். மாலை வரை சிறுவன் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், உண்மை நிலவரம் தெரியாமல் ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டு தனித்தனியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் அப்பகுதி மக்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் குளத்தில் தேடுதல் வேட்டை நடத்தி, சேற்றில் சிக்கியிருந்த சிறுவனின் உடலை மீட்டனர். இச்சம்பவம் மோரம்புடி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக இது ஒரு விபத்து என்று போலீசார் கருதினாலும், சிறுவனின் மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பதைத் துல்லியமாக அறிய உடற்கூறாய்வு அறிக்கையின் முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
