“உன் மகனைக் கொல்லப் போறேன்…” போனில் வந்த மிரட்டல்.. அலறியடித்து ஓடிவந்த தாய்க்கு வீட்டில் காத்திருந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“உன் மகனைக் கொல்லப் போறேன்…” போனில் வந்த மிரட்டல்.. அலறியடித்து ஓடிவந்த தாய்க்கு வீட்டில் காத்திருந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

சென்னை கோயம்பேடு பகுதியில் கள்ளக்காதலர்களுக்கிடையே ஏற்பட்ட போதை தகராறில், 9 வயது சிறுவன் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்த பூவரசி 30 என்ற வயது பெண், தனது 9 வயது மகன் தருணுடன் தமிழ்ச்செல்வன் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த தமிழ்ச்செல்வனுக்கும் பூவரசிக்கும் இடையே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து வீட்டிற்குத் தனியாகச் சென்ற தமிழ்ச்செல்வன், பூவரசியைச் செல்போனில் அழைத்து “உன் மகனைக் கொல்லப் போறேன்” என மிரட்டியுள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த சிறுவன் தருண், “அப்பா, என்ன ஆச்சு?” என அன்போடு கேட்டுக் கொண்டிருந்தபோதே, போதை வெறியில் இருந்த தமிழ்ச்செல்வன் அச்சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு உடலைக் கட்டிலுக்கு அடியில் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளார். பதற்றத்துடன் வீட்டிற்கு வந்து பார்த்த பூவரசி, மகன் பிணமாகக் கிடப்பதைக் கண்டு கதறி அழுதுள்ளார். தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பூவரசி அதிக மதுபோதையில் இருந்ததால் போதை தெளிந்த பின் அவரிடம் விசாரணையைத் தொடர்ந்த போலீசார், தப்பியோடிய கொலையாளி தமிழ்ச்செல்வனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in