காந்தி ஜெயந்தி விழாவுக்குச் சென்ற பள்ளிப் பேருந்து… நடுரோட்டில் காத்திருந்த ‘டம்பர்’ எமன்.. 35 வயது ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

காந்தி ஜெயந்தி விழாவுக்குச் சென்ற பள்ளிப் பேருந்து… நடுரோட்டில் காத்திருந்த ‘டம்பர்’ எமன்.. 35 வயது ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் காந்தி ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காகச் சென்று கொண்டிருந்த பள்ளிப் பேருந்து மீது அதிவேகமாக வந்த டம்பர் லாரி மோதிய கொடூர விபத்தில், 35 வயதுடைய பெண் அறிவியல் ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். கான்பூர்-சாகர் நெடுஞ்சாலையில் உள்ள பித்னூ என்ற கிராமத்திற்கு அருகே வெள்ளிக்கிழமை காலை இந்த விபத்து நேரிட்டுள்ளது. காட்பூர் சீமா பப்ளிக் பள்ளியைச் சேர்ந்த 35 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேருந்தில் பயணித்தபோது, மணல் ஏற்றிக்கொண்டு எதிரே வந்த லாரி பேருந்தின் பக்கவாட்டில் பலமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அறிவியல் ஆசிரியை ஐஸ்வர்யா ஸ்ரீவஸ்தவா உயிரிழந்த நிலையில், மேலும் 3 ஆசிரியர்களும் 3 மாணவர்களும் பலத்த காயமடைந்தனர்.

பேருந்தின் கண்ணாடிகள் உடைந்ததில் 7-ஆம் வகுப்பு படிக்கும் வர்மா என்ற மாணவனின் கண்ணில் கண்ணாடித் துண்டுகள் குத்திப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தவுடன் தப்பியோட முயன்ற லாரி ஓட்டுநரை அங்கிருந்த கிராம மக்கள் துணிச்சலாக மடக்கிப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். விபத்தில் காயமடைந்த இரு ஆசிரியர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அறிந்த பள்ளி முதல்வர், ஆசிரியை உயிரிழந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். இச்சம்பவம் குறித்து பித்னூ போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in