LATEST NEWS
“அந்த உடம்பை வச்சுகிட்டு எப்படித்தான் ” தவெக சத்யபாமாவை உருவக்கேலி செய்த ஸ்டாலின்..? தாராபுரத்தில் வெடித்த பெரும் அரசியல் சர்ச்சை..!!
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. தற்போதைய ஆட்சிமுறையை விமர்சித்து, இது “திணிக்கப்பட்ட தேர்தல்” என்று தனது உரையைத் தொடங்கிய அவர், தாராபுரம் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரான சத்யபாமாவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
பிரச்சார மேடையில் பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுகவிலிருந்து தவெகவிற்கு மாறியுள்ள வேட்பாளர் சத்யபாமாவை பொதுமக்களே “பெட்டி பாமா”, “பல்டி பாமா” என்றுதான் அழைக்கிறார்கள் எனக் குறிப்பிட்டார். மேலும், அவர் பணத்தைப் பெற்றுக்கொண்டு கட்சித் தாவியதாகக் குற்றம் சாட்டியதோடு , “அந்த உடலை வைத்துக் கொண்டு அவர் எப்படித்தான் அப்படிப் பல்டி அடித்தாரோ தெரியவில்லை” என்ற தொனியிலும் கருத்து தெரிவித்தார்.
ஸ்டாலினின் இந்த உரைக்குத் தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்தியில் இருந்து தற்பொழுது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அரசியல் ரீதியான கொள்கை விமர்சனங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, ஒரு பெண் வேட்பாளரை அவரது தோற்றத்தை வைத்து உருவக்கேலி செய்யும் விதமாகப் பேசியது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல என்றும், இதற்கு மு.க.ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தவெகவினர் வலியுறுத்தி வருகின்றனர்
