உச்சகட்ட கொடூரம்..! கிணத்து பக்கம் கிடந்த செருப்பு.. கணவருக்கு காத்திருந்த பயங்கர பேரதிர்ச்சி.. 2 குழந்தைகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு..!! – cinefeeds
Connect with us

CRIME

உச்சகட்ட கொடூரம்..! கிணத்து பக்கம் கிடந்த செருப்பு.. கணவருக்கு காத்திருந்த பயங்கர பேரதிர்ச்சி.. 2 குழந்தைகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு..!!

Published

on

விகாரபாத் மாவட்டம் புதூர் மண்டலத்திற்கு உட்பட்ட சோமநூர்த்தி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக இரண்டு பிள்ளைகளுடன் தாய் விவசாயக் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் சோகம் அரங்கேறியுள்ளது. மாதுகுடெம் கிராமத்தைச் சேர்ந்த மமதா (28) என்ற பெண்ணிற்கும், அவரது கணவர் ராஜுவிற்கும் இடையே நேற்று காலை கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மமதா, தனது இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவர்களைப் பல இடங்களிலும் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், சோமநூர்த்தி கிராமத்தின் வெளிப்புறப் பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றின் அருகே மமதாவின் செருப்புகளும், ஒரு பையும் கிடப்பதைக் குடும்பத்தினர் கண்டறிந்துள்ளனர். இதனால் பதறிப்போன அவர்கள், உடனடியாக இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

Advertisement

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் கிணற்றில் சோதனையிட்டதில், தாய் மமதா மற்றும் அவரது 4 வயது மகள் ஜனஸ்ரீ ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், கிணற்றில் மூழ்கியுள்ளதாகக் கருதப்படும் மமதாவின் 8 வயது மகன் சாகேத்தை மீட்கும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கிணற்றில் குதித்த இந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in