LATEST NEWS
பகீர் வீடியோ..! கண் இமைக்கும் நேரத்தில் 100 மீட்டர் ஆழப் பள்ளத்தில் பாய்ந்த கார்… நெஞ்சை உலுக்கும் டேஷ்கேம் காட்சி..!!
உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ராதூன் மாவட்டத்தின் சக்ரதா தியூனி மோட்டார் சாலையில், சில்லாடு கிராமத்திற்கு அருகே அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த அதிர்ச்சி தரும் கொடூர விபத்தின் காட்சிகள் காரினுள் இருந்த டேஷ்கேம் கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விபத்தில் காரில் பயணித்த மூவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர் உள்ளூர் மக்களின் உதவியோடு பள்ளத்தாக்கில் இறங்கி, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் கார் பள்ளத்தாக்கில் பாய்ந்த இந்த 22 வினாடி நேரக் காணொளி, மலைப் பாதைகளில் எவ்வளவு கவனமாகவும், கட்டுப்பாடான வேகத்திலும் வாகனங்களை இயக்க வேண்டும் என்பதை வாகன ஓட்டிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், கடுமையான நினைவூட்டலாகவும் அமைந்துள்ளது.
