நெஞ்சை உலுக்கும் கொடூரம்..! காதலியுடன் காரில் ஊர் சுற்றிய கணவன்.. தட்டிக்கேட்ட மனைவியை போனட்டில் ஏற்றி பல கிலோமீட்டர் தூரம் ஓட்டிய கணவன் மற்றும் காதலி கைது..!! – cinefeeds
Connect with us

CRIME

நெஞ்சை உலுக்கும் கொடூரம்..! காதலியுடன் காரில் ஊர் சுற்றிய கணவன்.. தட்டிக்கேட்ட மனைவியை போனட்டில் ஏற்றி பல கிலோமீட்டர் தூரம் ஓட்டிய கணவன் மற்றும் காதலி கைது..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில், தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சுனிதா என்ற பெண்ணுக்கு நீண்ட நாட்களாக சந்தேகம் இருந்து வந்தது. இந்த நிலையில், அவரது கணவர் மயங்க் சிங் தனது காதலியான மாஹி வர்மாவுடன் பிஜ்லி பம்பா பகுதியில் காரில் சென்று கொண்டிருந்ததை சுனிதா நேரில் பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக ஓடிச் சென்று கணவனின் காரை வழிமறித்து நிறுத்தினார்.

அப்போது அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மயங்க் சிங், காரை நிறுத்தாமல் சுனிதாவை காரால் இடித்துக் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால், சுனிதா எப்படியோ காரின் ஹூட் (Bonnet) பகுதி மீது ஏறிக்கொண்டு அதை இறுக்கமாகப் பற்றிக் கொண்டார். தன் மனைவி காரின் முன் பகுதியில் தொங்குவதைப் பார்த்தும் காரை நிறுத்தாத மயங்க், அவரையைக் கொல்லும் நோக்கில் பல கிலோமீட்டர்கள் தூரத்திற்கு காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.

Advertisement

காரில் தொங்கியபடி சுனிதா உயிருக்காகப் பயந்து உதவி கேட்டு வீதியில் அலறியுள்ளார். இந்த பயங்கரமான காட்சியைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காரைத் துரத்திச் சென்று, அதை மடக்கிப் பிடித்து சுனிதாவை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த லோகியா நகர் போலீஸார், கணவர் மயங்க் சிங் மற்றும் அவரது காதலி மாஹி வர்மா ஆகிய இருவரையும் அதிரடியாகக் கைது செய்து காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in