CRIME
“அதிகார திமிரா..?” கிராம சபையிலேயே தலித் பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்த காங்கிரஸ் தலைவரின் அராஜகம்.. பரபரப்பு வீடியோ..!!
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவரகொண்டா தொகுதிக்கு உட்பட்ட மல்லேபள்ளி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தின் போது, தலித் பெண் ஒருவரை காங்கிரஸ் கட்சித் தலைவர் அமர்நாத் கவுட் பொதுமக்களின் முன்னிலையில் கன்னத்தில் அறைந்து, அவரது முடியைப் பிடித்து இழுத்துத் தாக்கியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்களின் நிதி தொடர்பான விவகாரத்தில், கிராம அலுவலக உதவியாளரான மாதவி என்ற தலித் பெண்ணுக்கும் அமர்நாத் கவுடுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் நிதிப் பயன்பாடு குறித்து மாதவி கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தலைவர் அமர்நாத் கவுட், அனைவரின் முன்னிலையிலேயே அவரது கன்னத்தில் அறைந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே பெரும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. கிராம சபை கூட்டத்தில் ஒரு தலித் பெண் அதிகாரி மீது இத்தகைய அத்துமீறல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தலித் அமைப்புகள் மற்றும் உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், அரசியல் தலைவர்களின் இந்த அதிகாரத் திமிரான செயல்பாட்டைக் கண்டித்து அமர்நாத் கவுடை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்
