CRIME
“அய்யோ கடவுளே..” திடீரென ஆய்வகத்தில் உடைந்த சோதனைக் குழாய்… 28 வயது இளம் பெண் ஆராய்ச்சியாளருக்கு நேர்ந்த சோகம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள பிளேக் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்து வந்த தர்யா ஷிபிலோவா என்ற 28 வயது இளம் பெண் ஆராய்ச்சியாளர், பிளேக் நோய் தொற்றால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வகத்தில் பிளேக் பாக்டீரியாக்கள் அடங்கிய சோதனைக் குழாய் எதிர்பாராதவிதமாக உடைந்து சிதறியதால், அவருக்கு இந்த கொடிய நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் 29 அன்று கடுமையான நுரையீரல் அழற்சி காரணமாக அவர் அவசரப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், தீவிர சிகிச்சை பலனின்றி கடந்த அக்டோபர் 1 அன்று அவர் உயிரிழந்தார்.
ஆராய்ச்சியாளரின் இந்தத் திடீர் மரணத்தைத் தொடர்ந்து, சைபீரியாவில் உள்ள அந்த ஆராய்ச்சி மையத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கடுமையான பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த தர்யா ஷிபிலோவாவுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பில் இருந்த சுமார் 200 பேர் உடனடியாகக் கண்டறியப்பட்டு, அவர்கள் அனைவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்தும், ஆய்வகப் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா என்பது குறித்தும் ரஷ்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
