“முதலில் எனக்குத்தான் தரணும்…!” வளைகாப்பு விழாவில் எம்பியின் மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட தவெக எம்எல்ஏ.. பரபரப்பு வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“முதலில் எனக்குத்தான் தரணும்…!” வளைகாப்பு விழாவில் எம்பியின் மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட தவெக எம்எல்ஏ.. பரபரப்பு வீடியோ..!!

Published

on

திருச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், குத்துவிளக்கு ஏற்றுவதில் காங்கிரஸ் எம்பி மற்றும் தவெக எம்எல்ஏ இடையே ஏற்பட்ட மோதல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாவிற்குத் தலைமை தாங்கிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் முன்னிலையில் இந்த விசித்திரமான விவாதம் அரங்கேறியது. விழாவின் தொடக்கமாகக் குத்துவிளக்கு ஏற்ற முயன்ற காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக்கிடம் மெழுகுவர்த்தி கொடுக்கப்பட்டது. அதனைக் கண்ட திருவெறும்பூர் தொகுதி தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி ஆத்திரமடைந்து, “அரசு விதிமுறைப்படி தொகுதி எம்எல்ஏவான எனக்குத் தான் முதலில் முன்னுரிமை தந்து விளக்கேற்ற வாய்ப்பு தர வேண்டும்” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதத்தின் போது காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக், “நான் ஒரு திரியை மட்டும் ஏற்றிவிட்டு உங்களிடம் தருகிறேன்” எனக் கூறி மெழுகுவர்த்தியை நீட்டியுள்ளார். ஆனால், கோபத்தை அடக்க முடியாத தவெக எம்எல்ஏ நவல்பட்டு விஜி, எம்பியின் கையில் இருந்த மெழுகுவர்த்தியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி கீழே தட்டிவிட்டார். மேடையில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அமைச்சர் ரமேஷ் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றார். எனினும் நவல்பட்டு விஜி தொடர்ந்து முரண்டு பிடித்ததால், வேறு வழியின்றி அவரை முதலில் விளக்கேற்ற வைத்தார் அமைச்சர். இதனால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக், குத்துவிளக்கு ஏற்றாமலேயே சோகத்துடன் விழாவில் பங்கேற்ற நிகழ்வு தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in