CRIME
“அய்யய்யோ.. காட்டுக்குள் வீசப்பட்ட தலை… புதருக்குள் முண்டம்..!” தக்காளி லோடு ஏற்றச் சென்ற வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!
சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டம், கொடௌரா காவல் நிலையப் பகுதியிலுள்ள சித்மா கிராமத்தின் வனப்பகுதியில், வசிம் அன்சாரி என்ற வாலிபர் கொடூரமான முறையில் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி தக்காளி ஏற்றச் செல்வதாகக் கூறிவிட்டு ஸ்கூட்டரில் சென்ற வசிம் அன்சாரி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது ஸ்கூட்டர் காட்டுப்பகுதியில் தனியாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, உறவினர்கள் அங்கு தேடியபோது வசிமின் துண்டிக்கப்பட்ட தலை காட்டில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி புதர்களுக்குள் வீசப்பட்டிருந்த வசிமின் முண்டத்தையும் மீட்டனர். தலையும் முண்டமும் வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டிருந்ததால், இது திட்டமிட்ட படுகொலை என்பதை உறுதி செய்த போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
இந்தக் கொடூரக் கொலை மர்மத்தை 24 மணி நேரத்திற்குள் தீர்த்துவிட்டதாகக் கூறிய பலராம்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வதீபக் திரிபாதி, இது தொடர்பாக ஒரு பெண்ணையும் அவரது கணவரையும் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, இறந்த வசிம் அன்சாரிக்குக் கைது செய்யப்பட்ட பெண்ணுடன் கள்ள உறவு இருந்துள்ளது. வசிம் அப்பெண்ணைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால், ஆத்திரமடைந்த அப்பெண்ணும் அவரது கணவரும் சேர்ந்து வசிமைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, அக்டோபர் 2-ஆம் தேதி வசிமைத் தொலைபேசி மூலம் வீட்டிற்கு வரவழைத்த தம்பதியினர், அவர் வந்தவுடன் கோடரியால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு, சடலத்தை ஆள் நடமாட்டமில்லாத காட்டில் துண்டு துண்டாக வீசிச் சென்றுள்ளனர் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
