கலியுக கொடுமை.. அழகைக் காட்டி கடைக்காரரை மயக்கிய மகள்… பின்னால் தந்தை செய்த பகீர் காரியம்.. சினிமா பாணியில் நடந்த மெகா திருட்டு.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

கலியுக கொடுமை.. அழகைக் காட்டி கடைக்காரரை மயக்கிய மகள்… பின்னால் தந்தை செய்த பகீர் காரியம்.. சினிமா பாணியில் நடந்த மெகா திருட்டு.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோரில், தந்தை ஒருவரே தன் இளம் மகளைக் கூட்டுச் சேர்த்துக்கொண்டு கடைகளில் உள்ள பணப் பெட்டிகளைத் திட்டமிட்டுத் திருடி வந்த அதிர்ச்சிகரமான நெட்வொர்க் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. யோகேந்திரா என்ற அந்தத் தந்தை, தனது மகள் லட்சுமியுடன் பைக்கில் புறப்பட்டுப் பல்வேறு கடைகளை நோட்டமிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். குறிப்பிட்ட கடைக்குள் நுழைந்ததும், மகள் லட்சுமி தனது பேச்சாலும் அழகாலும் கடைக்காரரின் கவனத்தை முழுமையாகத் திசைதிருப்ப, அந்தச் சமயம் பார்த்துத் தந்தை யோகேந்திரா கல்லாப்பெட்டியில் இருக்கும் பணத்தைத் திருடிக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பியோடிவிடுவார்.

காவல் துறையினரிடம் சிக்காமல் இருப்பதற்காக இவர்கள் மிகச் சாதுரியமாகச் சினிமா பாணியில் காய் நகர்த்தியுள்ளனர். திருட்டை முடித்துவிட்டுப் பைக்கில் ஏறுவதற்கு முன்பாக, மகள் லட்சுமி தனது முகத்தை முகமூடியால் மூடிக்கொள்ள, தந்தை யோகேந்திரா ஹெல்மெட் அணிந்துகொள்வார்; இதனால் சிசிடிவி கேமராக்களில் இவர்களது முகம் பதிவாகாமல் தப்பித்து வந்துள்ளனர். அடையாளத்தைக் மறைக்க இவர்கள் பயன்படுத்திய பைக் எண்கூட இல்லாதது விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், இந்த விசித்திரக் கொள்ளைக் கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in