CRIME
அய்யோ கொடுமையே..! வெறும் 80 ரூபாய்க்காக இப்படியா..? நண்பனின் கழுத்தை நெரித்து கூர்மையான கம்பியால் குத்திக் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் சியோஹாரா பகுதியில், அனீஸ் என்ற வாலிபர் தனது நண்பர்கள் மூவருடன் சேர்ந்து கடந்த செப்டம்பர் 23 அன்று மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வெறும் ரூ.80 பணம் தொடர்பாகத் திடீரெனத் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நண்பர்களில் இருவர் அனீஸைப் பிடித்துக் கொள்ள, மூன்றாவது நபர் தனது இடுப்புப் பெல்ட்டால் அவரது கழுத்தை இறுக்கியும், கூர்மையான இரும்புக் கம்பியால் கழுத்தில் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
பின்னர் அவரது சடலத்தைக் அருகில் இருந்த கரும்புத் தோட்டத்தில் வீசிச் சென்றுள்ளனர். மகன் மாயமானது குறித்து அனீஸின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சியோஹாரா போலிஸார், தீவிர விசாரணை நடத்தி அனீஸின் சடலத்தைக் கைப்பற்றியதுடன், கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
