“உன்னை விட்டு என்னால் வாழ முடியாது..!” காதலி, அவரது தம்பியைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு காதலன் எடுத்த கொடூர முடிவு.. பதறவைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“உன்னை விட்டு என்னால் வாழ முடியாது..!” காதலி, அவரது தம்பியைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு காதலன் எடுத்த கொடூர முடிவு.. பதறவைக்கும் பின்னணி..!!

Published

on

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், முதுகலை மருத்துவப் படிப்பு படித்து வரும் நவீன் ரோஹிலா என்ற மருத்துவர், தனது முன்னாள் காதலியான டாக்டர் ஸ்வேதா தாக்கூர் மற்றும் அவரது தம்பியை ஏர்கன் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. நவீனும் ஸ்வேதாவும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது காதலிக்கத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் குஜராத்தைச் சேர்ந்த ஸ்வேதாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், இருவருக்கும் இடையே கடுமையான மனக்கசப்பும் பதற்றமும் ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று இரவு தனது நண்பர்களுடன் ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய நவீன், காந்தி நகர் பகுதியில் உள்ள ஸ்வேதாவின் அடுக்குமாடிக் குடியிருப்பு மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார். அங்கு ஸ்வேதா, அவரது உறவினர் அஷுதோஷ் மற்றும் சில தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த நவீன் தான் மறைத்து வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியை எடுத்து ஸ்வேதாவை நோக்கிச் சுட்டுள்ளார். ஸ்வேதாவைக் காப்பாற்ற வந்த அவரது தம்பி அஷுதோஷ் மீதும் குண்டுகள் பாய்ந்தன. பின்னர் நவீன் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

Advertisement

தற்போது மூவரும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்; இதில் நவீனின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திலிருந்து போலீஸார் “உன்னை விட்டு என்னால் வாழ முடியாது” என்று எழுதப்பட்ட தற்கொலைக் கடிதம் ஒன்றை மீட்டுள்ளனர். மேலும், திரைப்படம் முடிந்து ஸ்வேதாவின் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பு நவீன் தனது தாயாருக்கு வீடியோ கால் மூலம் பேசியதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காந்தி நகர் போலீஸார் இருவரின் கைபேசி உரையாடல்கள் மற்றும் அழைப்பு விவரங்களைச் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in