LATEST NEWS
“ஸ்டாலினுக்கு எதிராக திருமாவளவன்..?” திருச்சி கிழக்கில் தவெக கூட்டணியின் அதிரடி வியூகம்.. வன்னி அரசு எச்சரிக்கைக்கு மத்தியிலும் அதிரடி பிளான்..!!
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் களம் இறக்கப்பட்டால், அவருக்குப் போட்டியாக தமிழக வெற்றி கழகம் கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை நிறுத்த ரகசியப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி தவெக கூட்டணிக்குள் வந்தால், தாங்கள் கூட்டணியில் இருந்து உடனடியாக வெளியேறுவோம் என்றும், தங்களின் அமைச்சர் பதவியைக் கூட ராஜினாமா செய்யத் தயங்க மாட்டோம் என்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த உட்கட்சி மற்றும் கூட்டணிக் குழப்பங்களுக்கு மத்தியில், திருமாவளவனைத் திருச்சி கிழக்கில் நிறுத்த தவெக தலைமை ஆலோசித்து வருவது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் திருச்சியில், தவெக கூட்டணிக்குச் சாதகமாக உள்ள பட்டியலின மக்களின் வாக்கு வங்கியை முழுமையாக ஒருங்கிணைத்து மேலும் வலுப்படுத்த இந்தத் திட்டம் பெரிதும் கைகொடுக்கும் எனத் தவெக தலைமை நம்புகிறது. ஸ்டாலினுக்கு எதிராகத் திருமாவளவனை நிறுத்தினால் தேர்தல் களம் அகில இந்திய அளவில் கவனம் பெறும் என்றும், இதன் மூலம் தவெக-விசிக கூட்டணி மிகவும் பலமாக மாறும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
