“அடப்பாவிகளா..வெறும் மாட்டுச் சாணத்திற்காக இப்படியா..?” சொந்த தம்பியை குடும்பமுமே சேர்ந்து செய்த கொடூர காரியம்.. 14 வருடங்களுக்குப் பிறகு நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!! – cinefeeds
Connect with us

CRIME

“அடப்பாவிகளா..வெறும் மாட்டுச் சாணத்திற்காக இப்படியா..?” சொந்த தம்பியை குடும்பமுமே சேர்ந்து செய்த கொடூர காரியம்.. 14 வருடங்களுக்குப் பிறகு நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தின் காகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாந்வத் கிராமத்தில், கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு மாட்டுச் சாணம் போடுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தம்பதியர் மற்றும் அவர்களது மருமகள் உட்பட 3 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மாட்டுச் சாணம் போடும் இடம் தொடர்பாக அண்ணன் மற்றும் தம்பி குடும்பத்தினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில் அண்ணன், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் சேர்ந்து தனது சொந்த தம்பியான சிவ்பாலனை லத்திகளாலும் கற்களாலும் கொடூரமாக அடித்துக் கொலை செய்தனர். இந்த நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்த நிலையில், ஃபதேபூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ராமச்சந்திரா மற்றும் அவரது மனைவி மற்றும் அவர்களது மருமகள் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்து ஆயுள் தண்டனை விதித்துள்ளார். மேலும், அவர்களுக்குத் தலா 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வெறும் மாட்டுச் சாணம் போடும் ஒரு சாதாரணப் பிரச்சினைக்காக, 14 ஆண்டுகளுக்கு முன்பு சொந்தத் தம்பியை முழு குடும்பமுமே சேர்ந்து அடித்துக் கொன்ற வழக்கில் தற்போது நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அதிரடித் தீர்ப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in