CRIME
“அடக்கடவுளே.. காலையில் கல்யாணம்… இரவில் போலீஸ் ஸ்டேஷன்..” புதுமாப்பிள்ளை செய்த காரியத்தால் போர்க்களமான மண்டபம்.. 4 மணி நேரத்தில் நடந்தது என்ன..? பரபரப்பு சம்பவம்..!!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரர் ரூபன் (31) என்பவரும், கேரள எல்லைப் பகுதியான பாறசாலையைச் சேர்ந்த மருந்தாளுனர் இளம்பெண்ணும் நான்கு வருடங்களாகக் காதலித்து வந்தனர். ஆரம்பத்தில் பெண் வீட்டார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திங்கள்கிழமை காலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. அன்று இரவு ரூபனின் ஊரில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றபோது, பெண்ணின் தந்தை சீதனமாகப் பல வீட்டு உபயோகப் பொருட்களுடன் ஒரு புதிய காரையும் வரதட்சணையாக வழங்கியிருந்தார்.
வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, மதுபோதையில் இருந்த புதுமாப்பிள்ளை ரூபன், மணப்பெண்ணின் தந்தை கண் முன்னாலேயே மணப்பெண்ணின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனைத் தட்டிக்கேட்ட மாமனாரையும் அவர் கொடூரமாகத் தாக்கி ரகளையில் ஈடுபட்டதால், திருமண மண்டபமே போர்க்களமாக மாறியது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ரூபன் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், காயமடைந்த பெண்ணின் தந்தை குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்து, தனது மகளை இரவோடு இரவாகத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். புகாரின் அடிப்படையில், இராணுவ வீரர் ரூபன் மீது இரு பிரிவுகளின் கீழ் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். காலையில் இணைந்த ஜோடி இரவிலேயே பிரிந்த இச்சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
