ஸ்பேம் & சைபர் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி..! புதிய சேவை யாருக்கெல்லாம் கிடைக்கும்..? மத்திய அரசு அளித்த தெளிவான விளக்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்பேம் & சைபர் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி..! புதிய சேவை யாருக்கெல்லாம் கிடைக்கும்..? மத்திய அரசு அளித்த தெளிவான விளக்கம்..!!

Published

on

மத்திய அரசு ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்களின் போனில் ஏற்கனவே சேமிக்கப்பட்ட தொடர்புகள், அவர்கள் சேமித்து வைத்துள்ள பெயரிலேயே காட்டப்படும். அதேவேளையில், போனில் சேமிக்கப்படாத எண்களிலிருந்து அழைப்புகள் வரும்போது, அழைப்பாளர் தங்களது தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் சிம் கார்டு வாங்கியபோது அளித்த KYC ஆவணங்களின்படி பதிவு செய்யப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ பெயரே திரையில் காட்டப்படும்.

வெளிநாடுகளிலிருந்து வரும் சர்வதேச அழைப்புகளைப் பொறுத்தவரை, அழைப்பாளரின் பெயருக்குப் பதிலாக ‘INTERNATIONAL CALL’ என்றே குறிப்பிடப்படும். இந்த புதிய பாதுகாப்பு வசதியானது முதற்கட்டமாக 4G மற்றும் 5G சிம் கார்டுகள் மற்றும் மேம்பட்ட வயர்லெஸ் நெட்வொர்க் வசதி கொண்ட மொபைல் போன்களில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

Advertisement

இருப்பினும், இந்தச் சேவையில் ஒரு குறிப்பிட்ட விதிவிலக்கும் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ‘Calling Line Identification Restriction’ எனப்படும் ‘அழைப்பாளர் அடையாளக் கட்டுப்பாட்டு வசதி’-யை ஏற்கனவே தங்கள் போன்களில் செயல்படுத்தியுள்ள பயனர்களின் பெயர்கள் இந்த புதிய சேவையின் மூலமும் காட்டப்படாது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in