“கவலைப்படாதீங்க.. பாப்பாவ நான் பாத்துக்குறேன்” ரோடு ஷோவில் போஸ்டரைப் பார்த்ததும் காரை நிறுத்தி CM விஜய் செய்த காரியம்.. பெற்றோருக்கு கொடுத்த வாக்குறுதி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கவலைப்படாதீங்க.. பாப்பாவ நான் பாத்துக்குறேன்” ரோடு ஷோவில் போஸ்டரைப் பார்த்ததும் காரை நிறுத்தி CM விஜய் செய்த காரியம்.. பெற்றோருக்கு கொடுத்த வாக்குறுதி..!!

Published

on

கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட ரோடு ஷோ நிகழ்வின் போது, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மக்கள் கூட்டத்திற்கு நடுவே தன்பக்கம் ஈர்க்கப்பட்ட ஒரு பதாகையைக் கண்டு உடனடியாகத் தனது வாகனத்தை நிறுத்த உத்தரவிட்டார். ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத் திறப்பு விழாவிற்காக அவினாசி சாலை வழியாகச் சென்ற அவரது வாகனப் பேரணியில், ஆயிரக்கணக்கான மக்கள் பூக்களைத் தூவி வரவேற்றுக் கொண்டிருந்தனர். அந்த நெரிசலுக்கு மத்தியிலும், தீவிர நோய் பாதிப்பால் அவதிப்படும் ஆருத்ரா என்ற பிஞ்சு குழந்தைக்கு சிகிச்சை உதவி கேட்டு அவதியுற்ற பெற்றோர் ஏந்தியிருந்த போஸ்டரை அவர் கவனித்தார்.

https://twitter.com/polimernews/status/2110990192127754427/video/1

Advertisement

கூட்ட நெரிசலில் அந்தப் போஸ்டர் தன்னிடம் வந்து சேர்ந்ததும், முதலமைச்சர் விஜய் அதை முழுமையாகப் படித்துப் பார்த்தார். குழந்தையின் புகைப்படத்துடன் இருந்த அந்தப் பதாகையைக் கண்டதும் உருகிய அவர், அங்கேயே வாகனத்தை நிறுத்தி காத்திருந்து, குழந்தையின் பெற்றோரைத் தன் அருகே அழைத்தார். பின்னர், உடனடியாக அந்தப் போஸ்டரின் பின்புறத்தில் அவர்களின் அலைபேசி எண்ணை தனது சொந்தக் கையால் எழுதி வாங்கிக் கொண்டார்.

பெற்றோரின் கைகளைப் பற்றி நம்பிக்கையூட்டிய முதலமைச்சர் விஜய், “கவலைப்படாதீங்க, ஆருத்ரா பாப்பாவை நான் பார்த்துக்கிறேன், என்னால முடிஞ்ச உதவியை கண்டிப்பா செய்யுறேன்” என்று நெகிழ்ச்சியோடு உறுதியளித்தார். சாலையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களின் முன்னிலையில், தவித்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு முதலமைச்சர் உடனடியாக ‘ஆன் ஸ்பாட்’-ல் (On Spot) அலைபேசி எண்ணை வாங்கி உதவி செய்ய முன்வந்த இந்த நெகிழ்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் படுவைரலாகப் பரவி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in