LATEST NEWS
அறுவை சிகிச்சை செய்தாலும் திருநங்கைதான்… பெண்களுக்கான பிஎன்எஸ் சட்டப்பிரிவு 69 அவர்களுக்கு பொருந்தாது..! உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை குற்றமாக வரையறைக்கும் புதிய குற்றவியல் சட்டமான பிஎன்எஸ் சட்டப்பிரிவு 69, திருநங்கைகளுக்கு பொருந்தாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெண்ணாக மாறுவதற்கான பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும், அவர் இந்திய தண்டனைச் சட்டத்தின் 69வது பிரிவின் கீழ் ‘பெண்’ என்ற வரையறைக்குள் வரமாட்டார் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில், திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதியளித்து திருநங்கையுடன் உறவு கொண்டதாகக் கூறப்பட்ட புகாரின் பேரில் முகமது ஜாகிர் என்பவர் கைது செய்யப்பட்ட வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புகார்தாரரான திருநங்கை, தான் பிறப்பால் ஆணாக இருந்ததாகவும், பின்னர் ஏப்ரல் 11, 2023 அன்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். புதிய பிஎன்எஸ் சட்டத்தின் 69வது பிரிவானது, திருமணம் செய்துகொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்தோ அல்லது ஏமாற்றியோ பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதை குற்றமாக வரையறுக்கிறது. இந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ள ‘பெண்’ என்ற சொல், பெண்ணாகப் பிறந்தவர்களை மட்டுமே உள்ளடக்கியது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பிறப்பால் ஆணாகப் பிறந்த ஒருவர் அறுவை சிகிச்சை செய்துகொண்டாலும், அவர் ஒரு திருநங்கையாகவே கருதப்படுவார் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமை தொடர்பான விதிகளில் திருநங்கைகளையும் சேர்க்க வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையை நாடாளுமன்றம் ஏற்கவில்லை என்பதையும், ‘பெண்’ என்பதற்கான வரையறை மாற்றமின்றி உள்ளதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இதன் அடிப்படையில் இந்த வழக்கில் பிரிவு 69 பொருந்தாது என்று கூறி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
