“யாரு டா இவன்..?” ஆற்று வெள்ளத்தில் பாய்ந்த கார்.. குடும்பமே நதிக்குள் தத்தளிக்க.. வெளியே வந்து ஓட்டுநர் செய்த மிரட்டலான காரியம்.. வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“யாரு டா இவன்..?” ஆற்று வெள்ளத்தில் பாய்ந்த கார்.. குடும்பமே நதிக்குள் தத்தளிக்க.. வெளியே வந்து ஓட்டுநர் செய்த மிரட்டலான காரியம்.. வைரலாகும் வீடியோ..!!

Published

on

உத்தரகாண்ட் மாநிலம் பௌரி மாவட்டத்தில் உள்ள யம்கேஷ்வர் பகுதியில், ஹரியானா மாநிலப் பதிவு எண் கொண்ட கார் ஒன்று ஒட்டுமொத்தக் குடும்பத்தினருடன் நதிக்குள் பாய்ந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வாகனத்தை நேராக நதிக்குள் செலுத்தியபோது, அவரது குடும்பத்தினர் அனைவரும் காரின் உள்ளேயே அமர்ந்திருந்தனர். ஆனால், இந்த விபத்தில் யாருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படாமல் கார் நதியின் நடுவே சிக்கிக் கொண்டது.

இந்தச் சம்பவத்தில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், கார் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய பிறகும் ஓட்டுநர் சற்றும் பயப்படாமல் காரின் கூரை மீது ஏறி நின்று ஜாலியாகப் பொழுதுபோக்கிக் கொண்டிருந்தார். குடும்பத்தினர் உள்ளே தவித்துக்கொண்டிருக்க, ஓட்டுநர் காரின் மேல் நின்றுகொண்டு வேடிக்கை பார்த்த இந்தக் காட்சியைக் கண்டு அங்கிருந்த உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in