LATEST NEWS
“அந்த ‘மே 4’ அரசியல் ரகசியம்” விஜய்யின் மாஸ் வெற்றியில் த்ரிஷாவின் கனெக்ஷன்.. அரசியலில் த்ரிஷா என்ட்ரி கன்பார்ம்… சோஷியல் மீடியாவில் அதிரும் கணிப்பு..!!
இந்தாண்டு இறுதிக்குள் நடிகை த்ரிஷா அரசியலில் நுழைவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருப்பதாகப் பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்துள்ள தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. அந்த ஜோதிடரின் கணிப்பில், கடந்த 2026 மே 4ஆம் தேதியன்று முதலமைச்சர் விஜய்யின் தேர்தல் வெற்றியும் நடிகை த்ரிஷாவின் பிறந்தநாளும் ஒரே நாளில் ஒருசேர வந்தது, தமிழக அரசியல் அத்தியாயத்தில் ஒரு சுவாரஸ்யமான பரிணாமமாக அமைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே தமிழக வெற்றிக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக (MP) த்ரிஷா தேர்வு செய்யப்படப் போகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரவி பெரும் புயலைக் கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழ்நிலையில், த்ரிஷாவின் அரசியல் வருகை குறித்த இந்த புதிய ஜோதிடக் கணிப்பு தவெக தொண்டர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
