மக்களே மதியம் வருது ஆபத்து… இடி, மின்னலுடன் கூடிய அதிதீவிரக் கனமழைக்கு வாய்ப்பு… கடலோர மாவட்டங்களுக்குப் பலத்த எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மக்களே மதியம் வருது ஆபத்து… இடி, மின்னலுடன் கூடிய அதிதீவிரக் கனமழைக்கு வாய்ப்பு… கடலோர மாவட்டங்களுக்குப் பலத்த எச்சரிக்கை..!!

Published

on

தமிழ்நாட்டின் வடகடலோர மாவட்டங்களில் இன்று மதியம் முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர்கள் கணித்துள்ளனர். ஆந்திராவை நோக்கி நகர்ந்த சூறாவளி சுழற்சி, மீண்டும் வடதமிழ்நாட்டை நெருங்கி வருவதே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் கடலோரப் பகுதி மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த சூறாவளி சுழற்சி மாற்றத்தின் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர் உள்ளிட்ட வடகடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வானிலை மாற்றங்களைக் கவனித்து, பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in