“என் குழந்தை இல்லை என ஏமாற்றுகிறார்..!” அதிமுக மாநில நிர்வாகி மீது பாய்ந்த பாலியல் வழக்கு.. 25 வருட ரகசியத்தை உடைத்த பெண்.. சங்கரன்கோவிலில் வெடித்த சர்ச்சை..!!! – cinefeeds
Connect with us

CRIME

“என் குழந்தை இல்லை என ஏமாற்றுகிறார்..!” அதிமுக மாநில நிர்வாகி மீது பாய்ந்த பாலியல் வழக்கு.. 25 வருட ரகசியத்தை உடைத்த பெண்.. சங்கரன்கோவிலில் வெடித்த சர்ச்சை..!!!

Published

on

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர்மன்றத் துணைத் தலைவரும், அதிமுக மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளருமான கண்ணன் என்ற ராஜு (55) மீது, அவரது உறவினர் பெண் ஒருவர் அளித்துள்ள பாலியல் அத்துமீறல் மற்றும் ஏமாற்றுப் புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவிலைச் சேர்ந்த 45 வயதுடைய ரதி என்ற அந்தப் பெண், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் சென்று இந்த அதிரடிப் புகாரை அளித்துள்ளார். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் சிறுவயதாக இருந்தபோதே கண்ணன் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் ரதிக்குத் திருமணமாகி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்துள்ளார். அந்த இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட கண்ணன், ரதியைத் தான் கவனித்துக் கொள்வதாகக் கூறி மீண்டும் அவருடன் திருமணத்தை மீறிய உறவைத் தொடர்ந்துள்ளார். இந்தத் தொடர்பின் மூலமாகத் தனக்கு ஒரு குழந்தை பிறந்ததாகவும், ஆனால் தற்போது அந்தக் குழந்தை தனக்குப் பிறந்தது இல்லை என்று கூறி கண்ணன் தன்னை ஏமாற்றி மறுப்பதாகவும் ரதி குற்றம்சாட்டியுள்ளார். தமக்கு அநீதி இழைத்த அரசியல் பிரமுகர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

Advertisement

இந்தக் கடுமையான புகாரின் அடிப்படையில், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அதிமுக நிர்வாகி கண்ணன் என்ற ராஜு மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றவியல் மிரட்டல் விடுத்தல்பிரிவு 351(2)) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகாரில் கூறப்பட்டுள்ள விபரங்கள் மற்றும் சிறுவயதில் நடந்த அத்துமீறல்கள் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும், குற்றம்சாட்டப்பட்ட நகர்மன்றத் துணைத் தலைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in