LATEST NEWS
BREAKING: அக்டோபர் 26ம் தேதி வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்.!!
தமிழ்நாட்டில் அக்டோபர் 26ஆம் தேதி வரை சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை தெரிவித்துள்ளார். தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் வேளையில், இந்த அதிகாரப்பூர்வ மழை அப்டேட் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, வங்கக் கடலில் உருவாகும் புதிய வானிலை மாற்றமாக, வரும் அக்டோபர் 23ஆம் தேதி தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் மற்றொரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைந்து வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும் என்பதால் வானிலை மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
