CRIME
அய்யோ கொடுமையே.. பிறந்த 30 நிமிடத்தில் துடிதுடிக்கக் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. 4 நாட்களாக காதலனுடன் சேர்ந்து தாய் செய்த வெறிச்செயல்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி…!!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஃபோர்ட் வொர்த்பகுதியில், தான் பெற்றெடுத்த பச்சிளங் குழந்தையை விடுதி குளியலறை தொட்டியில் மூழ்கடித்துக் கொன்ற தாய் மற்றும் அவளது காதலன் மீது காவல்துறை கடுமையான வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. கடந்த அக்டோபர் 14 அன்று ‘டிரம்மர்ஸ் இன்’ என்ற விடுதியில் தங்கியிருந்த அவியா லினெட் காண்ட்ரெல் என்ற பெண், முழுவளர்ச்சியடைந்த பெண் குழந்தையைப் பிரசவித்துள்ளார். பிறந்தவுடன் அசைவுகளுடன் இருந்த அந்தக் குழந்தையை, அழுதுவிடக் கூடாது என்பதற்காக சுமார் 30 நிமிடங்கள் குளியலறைத் தொட்டியில் முகங்குப்புற தண்ணீரில் போட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
இந்த கொடூரக் கொலைக்குப் பிறகு, அந்தக் குழந்தையின் உடலை ஒரு பையில் அடைத்து கழிவறைக்கு அருகில் நான்கு நாட்களாக மறைத்து வைத்துள்ளனர். பின்னர் அக்டோபர் 18 அன்று, அவளது காதலன் கேம்ரான் கைஜுவான் பேக்கர் என்பவனுடன் சேர்ந்து, குழந்தையின் உடலை ஒரு பயணப் பையில் திணித்து குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். அன்று இரவே குப்பைத் தொட்டியைத் தேடிய ஒரு பெண் உடலைக் கண்டெடுத்த நிலையில், காவல்துறை நடத்திய விசாரணையில் இந்த வெறிச்செயல் அம்பலமானது. தற்பொழுது தாய்க்கு மரண தண்டனை விதிக்கக்கூடிய கொலைக் குற்றச்சாட்டும், அவளது காதலனுக்கு பிணத்தை அவமதித்த குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
