ஐயோ கடவுளே..! ரோட்டில் சிதறிக்கிடந்த பொம்மைகள்.. பூஜை கொண்டாடிவிட்டு திரும்பிய வழியில் சோகம்..! நெஞ்சை பதற வைக்கும் கோர விபத்து..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஐயோ கடவுளே..! ரோட்டில் சிதறிக்கிடந்த பொம்மைகள்.. பூஜை கொண்டாடிவிட்டு திரும்பிய வழியில் சோகம்..! நெஞ்சை பதற வைக்கும் கோர விபத்து..!!

Published

on

ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதியதில் தாயும் அவரது 4 வயது மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பீகாரைச் சேர்ந்த ஊர்மிளா தேவி (35) என்பவர் தனது நான்கு குழந்தைகளுடன் ஹசாரிபாக் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் துர்கா பூஜை பண்டிகையைக் கொண்டாடிவிட்டு, மீண்டும் பீகார் மாநிலம் பரச்சட்டி பகுதியில் உள்ள தனது கணவர் வீட்டிற்குத் திரும்பியபோது இந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது.

பார்ஹி சௌக் அருகே குடும்பத்தினர் சாலையைக் கடக்க முயன்றபோது, ஒரு அதிவேக லாரி அவர்கள் மீது மோதியதில் ஊர்மிளா தேவியும் அவரது இளைய மகனான தீான்ஷு குமாரும் (4) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களுடன் உடனிருந்த மற்ற மூன்று குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். விபத்து நடந்த இடத்தில் குழந்தைகளின் பொம்மைகளும் இதரப் பொருட்களும் சாலையில் சிதறிக்கிடந்த விதம் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

Advertisement

தகவலறிந்ததும் பார்ஹி காவல் நிலையப் பொறுப்பாளர் வினோத் குமார் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக ஹசாரிபாக் சதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்தியவிட்டுத் தப்பியோடிய லாரியைப் போலீசார் பறிமுதல் செய்துள்ள நிலையில், தலைமறைவான ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in