“எப்போதும் போன் பேசிட்டே இருக்கா..” ஆத்திரத்தில் 22 வயது கணவன் எடுத்த கொடூர முடிவு.. மழைநீர் கால்வாயில் வீசப்பட்ட மூட்டை.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“எப்போதும் போன் பேசிட்டே இருக்கா..” ஆத்திரத்தில் 22 வயது கணவன் எடுத்த கொடூர முடிவு.. மழைநீர் கால்வாயில் வீசப்பட்ட மூட்டை.. கதி கலங்க வைக்கும் பின்னணி..!!

Published

on

பெங்களூரு மகாடி ரோடு பகுதியில், மனைவியின் சடலத்தைச் சாக்குப்பையில் மூட்டை கட்டி மழைநீர் வடிகால் கால்வாயில் வீசிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது ஆடைத் தொழிற்சாலை தொழிலாளியைப் பெங்களூரு போலீசார் வீடு வீடாகச் சென்று நடத்திய அதிரடி விசாரணையில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் முகமது இர்பாஸ் (22) என்றும், கொடூரமாகக் கொல்லப்பட்டவர் அவரது மனைவி ருக்ஷானா (25) என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பீகாரில் பலூன் விற்கும் போது காதலித்து ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெங்களூரு கோபாலபுராவிற்கு வந்து அங்குள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வந்துள்ளனர். இது ருக்ஷானாவின் இரண்டாவது திருமணமாகும்.

ருக்ஷானா எப்போதும் தனது செல்போனைப் பயன்படுத்திக் கொண்டே இருந்ததால், அவரது நடத்தையில் கடும் சந்தேகம் அடைந்த இர்பாஸ், அவருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தத் தகராறு கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி இரவில் எல்லை மீறியதைத் தொடர்ந்து, இர்பாஸ் கனமான கல்லை எடுத்து ருக்ஷானாவின் தலையை நசுக்கிக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மேலும் அவரது துப்பட்டாவை வாயில் திணித்துள்ளார். பின்னர், யாருடையதோ ஒரு மோட்டார் சைக்கிளின் பூட்டை உடைத்து, அதில் ருக்ஷானாவின் சடலம் இருந்த சாக்குப்பையை வைத்து நள்ளிரவில் தள்ளிக் கொண்டு சென்று, அருகில் இருந்த மழைநீர் வடிகால் கால்வாயில் வீசிவிட்டுத் தப்பியுள்ளார்.

Advertisement

அழுகிய நிலையில் இருந்த ருக்ஷானாவின் சடலத்தை அக்டோபர் 13 அன்று மீட்ட போலீசாருக்கு, எந்தவொரு அடையாளமும் கிடைக்காததால் விசாரணை முட்டுக்கட்டையில் நின்றது. மகாடி ரோடு போலீசார் 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து, அப்பகுதியில் உள்ள வீடுகளில் தீவிரமாக விசாரித்தபோது, கோபாலபுராவில் ஒரு பெண்ணைக் காணவில்லை என்ற துப்பு கிடைத்தது. அதன் அடிப்படையில் இர்பாஸைப் பிடித்து விசாரித்த போது, அவர் தனது மனைவி பீகாருக்குச் சென்றுவிட்டதாகக் கூறி போலீசாரை ஏமாற்ற முயன்றார். ஆனால், போலீசார் தங்களது பாணியில் நடத்திய தொடர் விசாரணையில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டு உடைந்து அழுதார். தற்பொழுது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இர்பாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in