LATEST NEWS
விஜயபாஸ்கரை பக்கத்துல வச்சுக்கிட்டே இப்படியா..? “விராலிமலை இருண்டு போய் இருந்தது..” மேடையிலேயே வெளுத்து வாங்கிய அமைச்சர் பர்வேஸ்..!!
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற அரசு விழாவில், விரைவில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ரூ.4.37 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தமிழக அமைச்சர்கள் வழங்கியுள்ளனர். விராலிமலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், 1384 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டன. இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் ஆகியோர் கலந்துகொண்டு திட்டங்களைத் தொடக்கி வைத்ததுடன், அங்கு அமைக்கப்பட்டிருந்த அரசுத் துறை கண்காட்சிகளையும் பார்வையிட்டனர்.
கடந்த 2026 பொதுத்தேர்தலில் விராலிமலை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார். இதனால் விராலிமலை தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், தவெக சார்பில் மீண்டும் விஜயபாஸ்கரே இங்கு களம் இறங்குவார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் நடைபெற்ற இந்த அரசு விழாவில், தவெக-வில் இணைந்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ சி.விஜயபாஸ்கரும் நேரில் கலந்துகொண்டு அமைச்சர்களுக்குத் தனது சார்பில் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
விழாவில் உரையாற்றிய அமைச்சர் முகமது பர்வேஸ், “விராலிமலை தொகுதி கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு திட்டமும் இல்லாமல் இருண்டு போய் இருந்தது; அதற்கு வெளிச்சம் கொடுக்கவே இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன” என்றும், “விராலிமலை தவெக-வின் கோட்டை” என்றும் பேசினார். கடந்த 2011 முதல் 2026 வரை விராலிமலை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய சி.விஜயபாஸ்கரை மேடையில் அருகில் வைத்துக்கொண்டே, அமைச்சர் பர்வேஸ் அந்தத் தொகுதி இருண்டு கிடந்ததாகப் பேசியது தற்
