“சாலையோரம் கிடந்த பெட்டி” திறந்துபார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி… கணவனின் கொடூர முகம் அம்பலம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“சாலையோரம் கிடந்த பெட்டி” திறந்துபார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி… கணவனின் கொடூர முகம் அம்பலம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில், கணவரைக் கொலை செய்து சடலத்தை இரும்புப் பெட்டிக்குள் அடைத்து நெடுஞ்சாலையோரத்தில் வீசிய கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உன்னாவ் – ரேபரேலி நெடுஞ்சாலையில் பெட்டிக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நபர் சோனு என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சோனுவின் மனைவி நேஹா, பக்கத்து வீட்டுக்காரர் ராகுல் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மற்றும் வாகனப் பதிவு எண்களின் உதவியோடு 12 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நேஹாவின் வாக்குமூலத்தின்படி, சோனு அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து அவரைத் தாக்குவதையும், பல பெண்களை வீட்டிற்கு அழைத்து வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். சம்பவத்தன்று சோனுவுக்கும் பக்கத்து வீட்டுக்காரர் ராகுலுக்கும் இடையே ஏற்பட்ட மதுபோதை தகராறில், ராகுல் சோனுவின் கழுத்தை நெரித்துக் கொன்றதாக நேஹா கூறியுள்ளார். பின்னர் சடலத்தை மறைப்பதற்காக ஒரு இரும்புப் பெட்டியை ஏற்பாடு செய்து, வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது கூலிப் பணம் தொடர்பாக ஏற்பட்ட தர்க்கத்தினால், டிரைவர் பெட்டியை சாலையோரத்திலேயே வீசிவிட்டுச் சென்றுள்ளார்.

Advertisement

இருப்பினும், இந்த வழக்கில் மற்றொரு முக்கியக் குற்றவாளியான ராகுல் தனக்கும் இந்தக் கொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என மறுத்துள்ளார். நேஹா பொருட்கள் மாற்றுவதற்காக வண்டி மட்டுமே கேட்டு வாங்கியதாகவும், அதற்கு முன்பே அவரே கணவரைக் கொலை செய்துவிட்டதாகவும் ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். இதனால், கொலையில் கைதானவர்களின் உண்மையான பின்னணி மற்றும் தனித்தனி பங்குகள் குறித்து அறிய 5 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in