“ஒன்றரை வயசு தம்பியை கோவிலுக்கு கூட்டிட்டுப்போயி” போதைக்கு அடிமையான 22 வயது அண்ணன் செய்த கொடூரம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!! – cinefeeds
Connect with us

CRIME

“ஒன்றரை வயசு தம்பியை கோவிலுக்கு கூட்டிட்டுப்போயி” போதைக்கு அடிமையான 22 வயது அண்ணன் செய்த கொடூரம்… கதறி துடிக்கும் பெற்றோர்..!!

Published

on

பீகார் மாநிலம் பாட்னாவின் ராணிதாலாப் காவல் எல்லைக்குட்பட்ட ஜீதன் சப்ரா கிராமத்தில், போதைக்கு அடிமையான 22 வயது இளைஞன் ஒருவன் தனது ஒன்றரை வயது தம்பியை கொடூரமான முறையில் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அஜித் குமார் என்ற அந்த வாலிபர், மது, கஞ்சா மற்றும் சுமாக் போன்ற போதைப்பொருட்களுக்கு தீவிரமாக அடிமையாகி இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று, அஜித் குமார் தனது தம்பியை வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் தனது தம்பியை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். பின்னர், இந்த கொடூரச் செயலை அறிந்த கிராம மக்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து, தப்பியோட முயன்ற அஜித்தை மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பாலிகஞ்ச் எஸ்டிபிஓ (SDPO) பங்கஜ் குமார் சர்மா தலைமையிலான போலீசார், குற்றவாளியைக் கைது செய்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். தடயவியல் ஆய்விற்காக அந்த பகுதி தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பக்கட்ட சோதனைகளின் அடிப்படையில், போலீசார் இச்சம்பவத்தின் பின்னணி, குற்றவாளியின் மனநிலை மற்றும் போதை நிலை குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in