“எங்க தண்டனையை ரத்து பண்ணுங்க” ‘நீல நிற டிரம்’ கொலை வழக்கு… தூக்குத் தண்டனையை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முஸ்கான் – சாஹில் மேல்முறையீடு..!! – cinefeeds
Connect with us

CRIME

“எங்க தண்டனையை ரத்து பண்ணுங்க” ‘நீல நிற டிரம்’ கொலை வழக்கு… தூக்குத் தண்டனையை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முஸ்கான் – சாஹில் மேல்முறையீடு..!!

Published

on

உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘நீல நிற டிரம்’ கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முஸ்கான் மற்றும் அவரது கள்ளக்காதலன் சாஹில் ஆகியோர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மீரட் மாவட்ட நீதிமன்றம் விதித்த மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து, தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி இருவரும் தங்களது வழக்கறிஞர்கள் மூலம் 168 பக்கங்கள் கொண்ட மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வழக்கில் முஸ்கான் ரஸ்தோகி மற்றும் சாஹில் சுக்லா ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என மீரட் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 30, 2026 அன்று அறிவித்தது. தொடர்ந்து, அக்டோபர் 14, 2026 அன்று இந்த வழக்கை ‘அரியவற்றிலும் மிக அரிய வழக்கு’ என வகைப்படுத்திய நீதிமன்றம், இருவருக்கும் தூக்குத் தண்டனை விதித்ததோடு தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. தற்போது இந்தத் தண்டனைகளை ரத்து செய்யக் கோரியே உயர் நீதிமன்றத்தை அவர்கள் நாடியுள்ளனர்.

Advertisement

தங்கள் மனுவில், அரசுத் தரப்பு தங்கள் மீதான குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறிவிட்டதாகக் குற்றவாளிகள் தரப்பு வாதிட்டுள்ளது. இந்த வழக்கு முற்றிலும் சூழ்நிலை ஆதாரங்களின் அடிப்படையிலானது என்றும், கீழ் நீதிமன்றம் ஆதாரங்களைச் சரியாக மதிப்பீடு செய்யாமல் சட்டக் கோட்பாடுகளைப் புறக்கணித்துவிட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதம் மற்றும் சிமெண்ட் வாங்கியதற்கான முறையான ரசீதுகள், சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை அரசுத் தரப்பு தாக்கல் செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in