LATEST NEWS
“பெத்தவங்க கண் எதிரே பறிபோன உயிர்” மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த குழந்தை.. அடுத்த நொடியே ஏறி இறங்கிய லாரி.. துடிதுடித்து பலியான சிறுவன்..!!
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், கடையநல்லூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவையராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தில் வசித்து வரும் நிலையில், நேற்று பகலில் தனது குடும்பத்தினரை மோட்டார் சைக்கிளில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தார்.
மதுரை – தென்காசி தேசிய சாலையில் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் சிக்னல் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சாலையின் மறுபுறம் நிலைதடுமாறி விழுந்த 3 வயதுக் குழந்தை அத்விக், அந்த வழியே தென்காசியை நோக்கி வந்த லாரி சக்கரத்தில் சிக்கினான்.
பெற்றோர் கண்முன்னே நடந்த இந்த கோர விபத்தில் குழந்தை அத்விக் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். பாலசுப்பிரமணியன் மற்றும் அவரது குடும்பத்தினர் லேசான காயங்களுடன் தப்பிய நிலையில், மகனின் உடல் நசுங்கியதைக் கண்டு பெற்றோர் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
