CRIME
“தந்தையிடம் போனில் பேசிக்கொண்டிருந்த 26 வயது மகள்..” அடுத்த நொடியே சுருண்டு விழுந்து நேர்ந்த கொடூரம்.. கண்ணீரில் மூழ்கிய குடும்பம்..!!
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ஆல்பானி நகரில் வசித்து வந்த தெலுங்கானாவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அக்ஷிதா, மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷிதா, அமெரிக்காவில் தனது உயர்கல்வியை முடித்துவிட்டு தற்போது வேலை தேடிக்கொண்டிருந்தார். சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டபடியே, இந்தியாவில் இருக்கும் தனது தந்தையிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென போன் கட் ஆனதால், சந்தேகம் அடைந்து வெளியில் வந்து பார்த்த அவரது சகோதரர், அக்ஷிதா மயங்கிய நிலையில் தரையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 26 வயதே ஆன இளம்பெண் அமெரிக்காவில் மாரடைப்பால் மரணமடைந்த செய்தி அவரது குடும்பத்தினரையும், அங்குள்ள தெலுங்கு சமூகத்தினரையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
