CRIME
“இட்லியில் விஷம் வைத்து” யூடியூப் பார்த்து மனைவி செய்த கொடூரம்.. துடிதுடிக்க பலியான அப்பாவி கணவன்.. கள்ளக்காதலுக்கு அரங்கேறிய பயங்கரம்…!!
கர்நாடக மாநிலம் மைசூரில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து இட்லியில் விஷம் வைத்துக் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மைசூர் மாவட்டம் ஹுன்சூர் தாலுகா வினோபா காலனியைச் சேர்ந்த பிளாஸ்டர் மேஸ்திரி ராம்பிரசாத் (35) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பாக அவரது மனைவி பவித்ரா மற்றும் அவரது கள்ளக்காதலன் சுனில் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பவித்ராவிற்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சுனில் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்த நிலையில், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்ட பவித்ரா, யூடியூப் பார்த்து ஊமத்தை விதையின் விஷத்தன்மை குறித்துத் தெரிந்துகொண்டுள்ளார். கடந்த அக்டோபர் 16 அன்று இரவு ராம்பிரசாத் வீட்டிற்கு வந்தபோது, பவித்ரா ஊமத்தை விதை பொடியைக் கலந்து இட்லியை அவருக்குக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த விஷம் வேலை செய்யாததால், உடனே கள்ளக்காதலன் சுனிலை வீட்டிற்கு வரவழைத்து, இருவரும் சேர்ந்து ராம்பிரசாத்தின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.
கொலைக்குத் பிறகு, கணவர் தயிர் சாப்பிட்டதால் எழவில்லை என்று ராம்பிரசாத்தின் குடும்பத்தாரிடம் பவித்ரா பொய் கூறியுள்ளார். அதனை நம்பிய குடும்பத்தினர் உடலைத் தகனமும் செய்துள்ளனர். எனினும், சம்பவத்தன்று இரவு பவித்ரா கள்ளக்காதலனுடன் இருந்ததை கவனித்த கிராம மக்கள், ராம்பிரசாத்தின் சகோதரருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், இட்லியில் விஷம் வைத்துக் கழுத்தை நெரித்துக் கொன்றதை இருவரும் ஒப்புக்கொண்டனர்.
