CRIME
அதிர்ச்சி ..! வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரவுடி கணவன் வெட்டிக்கொலை.. தவெக மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பாரதி அதிரடி கைது..!!
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரவுடி புதூர் மணிகண்டன் என்ற சுரேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைச் சம்பவம் தொடர்பாக, உயிரிழந்த சுரேஷின் மனைவியான தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பாரதியை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கொலைக்கான பின்னணி மற்றும் உண்மைக்கான காரணம் என்ன என்பது குறித்து பூதப்பாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு அல்லது முன்விரோதம் காரணமாக இக்கொலை நடந்ததா என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அண்மைக்காலமாக போதைப்பொருள் கடத்தல், பாலியல் துன்புறுத்தல், கொலை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் தவெக நிர்வாகிகள் அடுத்தடுத்து சிக்கி வருவது அக்கட்சியின் தலைமைக்கு பெரும் பின்னடைவாகவும், அரசியல் ரீதியாக அளுங்கட்சிக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.
